ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (17:57 IST)

மலாக்காவின் அடுத்த பயணத்துறைத் தூதர் ரஜினியா?

மலாக்காவின் அடுத்த பயணத்துறைத் தூதராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நியமிக்கலாமா என மலேசியப் பயணத்துறை,  கலாச்சார அமைச்சகம் ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் ‘த ஸ்டார் ஆன்லைன்’ (The Star Online) என்ற நிறுவனம்  செய்தி வெளியிட்டுள்ளது.


 
 
இதற்கு முன்னர் 2008-ஆம் ஆண்டில் மலாக்காவின் பயணத்துறைத் தூதராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மாநில அரசாங்கத்திடமிருந்து டத்தோ பட்டம் வழங்கப்பட்டது. அவரால் இந்திய பயணிகளின் வருகை  எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை என சிம் தொங் ஹின் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் ரஜினிகாந்தை மலாக்காவின் அடுத்த பயணத்துறைத் தூதராக நியமிப்பதைக் குறித்து மலேசியப் பயணத்துறை, கலாச்சார அமைச்சர் முகமது நஸ்ரி அப்துல் அசிஸ் ரஜினியிடம் பேசப்போவதாகக் கூறியுள்ளார்.