வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (20:11 IST)

மீண்டும் மகேஷ்பாபுவுடன் இணையும் பூஜா ஹெக்டே!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த மகரிஷி என்ற படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று மகேஷ்பாபு பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய 28வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகை பூஜா ஹெக்டே ஏற்கனவே சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா, பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் நான்கு பிரபல நடிகர்களுடன் நடிக்கும் ஒரே நடிகை பூஜா ஹெக்டே தான் என்று கூறப்பட்டு வருகிறது