திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (16:51 IST)

சிவகார்த்திகேயனிடம் அடம்பிடித்து ஓகே வாங்கிய இயக்குனர் மடோன் அஸ்வின்!

இயக்குனர் மடோன் அஸ்வின் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக மண்டேலா படத்தின் இசையமைப்பாளர் பரத் ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். வழக்கமாக சிவகார்த்திகேயன் படத்துக்கு அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள்தான் இசையமைத்து வந்தனர். ஆனால் இந்த படத்துக்கு தன்னுடைய இசையமைப்பாளர்தான் வேண்டும் என அடம்பிடித்து ஓகே வாங்கியுள்ளாராம் மடோன் அஸ்வின்.