புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (22:33 IST)

ரன்வீர் படத்திலிருந்து மாதவன் விலகியதற்கு காரணம் என்ன தெரியுமா?

நடிகர் மாதவன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒய்வில் இருப்பதால் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்திலிருந்து விலகியுள்ளார்.
 
ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த சூப்பர் ஹிட் தெலுங்கு படம் 'டெம்பர். கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங், சாஹா சலித் அலிகான் நடிக்கவுள்ளனர். ரோகித் ஷெட்டி இயக்கவுள்ளார்.
 
இந்த படத்தில் வில்லனாக மாதவன் நடிக்க இருந்தார். அப்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒய்வில் இருக்கிறார்.
 
இந்நிலையில், அந்த படத்திலிருந்து விலகுவதாக மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் ரோகித் ஷெட்டியின் மிக பெரிய ரசிகன் என்றும், அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.