எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் நடிகை யார்?
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் பேன் இந்தியன் தயாரிப்பாக உருவாக்க உள்ளது. இதனால் எம் எஸ் சுப்புலட்சுமியின் உருவத்துக்கு ஒத்துப் போகும் ஒரு தென்னிந்திய நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
இந்த பட்டியலில் ராஷ்மிகா, நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருக்கிறார்களாம். விரைவில் யார் நடிக்கிறார்கள் என்பதும் படத்தை இயக்கப் போவது யார் என்பதும் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.