வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (17:17 IST)

‘காலா’ ரிலீஸ் தேதி குறித்து லைகா நிறுவனம் விளக்கம்

‘காலா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து லைகா நிறுவனம் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளது.


 
கடந்த 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். அத்துடன், ஷூட்டிங் ரத்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தம் ஆகியவையும் நடைமுறையில் இருக்கின்றன.எனவே, ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘காலா’வின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள். காரணம், ‘காலா’வுக்கு முன்னரே சென்சார் வாங்கிய படங்களுக்கு, அதாவது மார்ச் மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் தடையில்லா சான்றும் இன்னும் ‘காலா’ படத்துக்கு கிடைக்கவில்லை. எனவே, படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், ரிலீஸ் தேதி குறித்து படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனம் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளது. “லைகா நிறுவனம் ‘காலா’ ரிலீஸ் தேதி குறித்து எந்த விஷயத்தையும் அறிவிக்கவில்லை. ‘காலா’ ரிலீஸ் தேதி குறித்து வெளியாகும் செய்திகளுக்கு நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாக முடியாது” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.