வியாழன், 17 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (14:15 IST)

லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு… காரணம் என்ன?

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் இதுவரை 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இந்த படம் வெளியான பின்னர் கார்த்தியின் மெய்யழகன் மற்றும் தேவரா போன்ற பெரிய படங்கள் ரிலீஸானாலும் இன்னமும் இந்த படத்துக்குக் கூட்டம் குறையவில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களை இந்த படம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் நாளை இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிவருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.  சமீபத்தில் சூப்பர் ஹிட்டான வாழை திரைப்படம் 50 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.