1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2025 (15:05 IST)

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.

இதனால் சமீபத்தைய ஆண்டுகளில் புதுமுக நடிகர்கள் நடித்து வெளியாகி பிளாகபஸ்டர் ஆன படமாக லவ் டுடே அமைந்தது. இதையடுத்து மற்ற மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் அதிகமாக தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் இந்தியியில் இந்த படம் ‘லவ் யப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அமீர்கானின் மகன் ஜுனைத் கான் மற்றும் ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இந்த படம் தமிழைப் போல இல்லாமல் பெரிய பட்ஜெட்டில் 60 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்டது. ஆனாலும் இந்த படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் நாளில் 1.5 கோடி ரூபாய்தான் வசூலித்துள்ளதாம்.