திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (10:13 IST)

திடீரென சூர்யாவோடு கைகோர்த்த லோகேஷ் கனகராஜ்? வைரலாகும் புகைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இரும்புக் கை மாயாவி எனும் படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு அதிகம் விரும்பப் படும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவர் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸாகப் போகிறது. அதன் பிறகு அவர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் எனும் படத்தை இயக்குகிறார்.

அதற்குப் பின்னர் அவர் சூர்யாவை வைத்து இரும்புக் கை மாயாவி எனும் சூப்பர் ஹீரோ படத்தை  இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது . மாநகரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் இந்த கதையை சூர்யாவுக்கு சொல்லியுள்ளார். ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால் அப்போது அந்த படத்தை உருவாக்க முடியவில்லை. ஆனால் இப்போது மாஸ்டருக்கு பின் அவரின் மார்க்கெட் அதிகமாகியுள்ளதால் அடுத்து இந்த படத்தை உருவாக்கலாம் என சூர்யா தெரிவித்ததால் அந்த திரைக்கதையை மெருகேற்றும் பணியில் லோகேஷ் இருப்பதாக சொல்லப்படுகிறது.