வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:04 IST)

தோனி தயாரித்த எல்ஜிஎம் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்த போது தோனி கலந்துகொண்டது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது, ஆனால் ரிலீஸுக்குப் பிறகு படத்துக்கு மோசமான விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. இதனால் படத்தின் வசூல் தரைமட்டமாக படுத்தது. ஆனாலும் எதிர்பார்ப்புக் காரணமாக முதல்நாளில் இந்த படம் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாம்.

அடுத்தடுத்த நாட்களில் மோசமான விமர்சனம் காரணமாக வசூல் பெரிய அளவில் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.