1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (16:37 IST)

உச்ச நட்சத்திரத்தை ஃபாலோ செய்கிறாரா இவர்?

டிவியில் இருந்து சினிமாவுக்குப் போய் நாயகனாகி இருக்கும் நடிகர், உச்ச நட்சத்திரத்தை ஃபாலோ செய்வதாக கூறப்படுகிறது.



சின்னத்திரையில் ஜொலித்த சிவ நடிகர், வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகிறார். சில படங்களிலேயே ஜிவ்வென மேலே வந்துவிட்ட அவர், பல வருடங்களாக கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் சம்பளத்தை எல்லாம் தாண்டி சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமல்ல, டாப் ஹீரோயின்களுடன் ஜோடி போட்டுள்ளார்.

எல்லாவற்றிலும் அசுர வேகத்தில் பாயும் அவர், உச்ச நட்சத்திரம் பட்டமும் சீக்கிரமே தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். அதற்காக, உச்ச நட்சத்திரம் தற்போது பண்ணும் எல்லா வேலைகளையும் அவரும் இப்போதே செய்கிறாராம். உச்ச நட்சத்திரத்தின் போன படம் மலேசியாவில் ஷூட்டிங் செய்யப்பட்டது. சிவ நடிகர் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் தற்போது அங்குதான் நடைபெறுகிறது. இங்கு கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் உச்ச நட்சத்திரம். அதைப்போலவே மலேசியாவிலும் தன் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறார் சிவ நடிகர். கூட்டிக் கழிச்சி பாருங்க…