வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (15:00 IST)

ரஜினியின் லால் சலாம் ஓடிடி ரிலீஸ் குறித்து பரவிய வதந்தி!

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் ரிலீஸூக்குப் பிறகு படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும் படம் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது திடீரென செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என ஒரு போஸ்டர் வெளியானது. ஆனால் அது ரசிகர்கள் உருவாக்கி பரப்பிவிட்ட போஸ்டர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இதனால் இப்போதைக்கு லால் சலாம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதுதான் உண்மை.