திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (12:44 IST)

ரெண்டே நாளில் IMDB டாப் ரேட்டிங்கில் வந்த கேஜிஎஃப் 2!

கேஜிஎப் 2 திரைப்படம் தற்போது இந்திய படங்களின் வரிசையில் Imdb யில் முன்னணியில் உள்ளது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது 10000க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் இந்த திரைபப்டத்துக்கு அபரிமிதமான வரவேற்புக் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது உலகளாவிய திரைப்பட ரேட்டிங் தளமான ஐஎம்டிபியில் கேஜிஎஃப் 2 திரைப்படம் அதிக புள்ளிகளைப் பெற்றுவருகிறது. வெளியாகி இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் 8.4 ரேட்டிங் பெற்று இந்திய படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது.