வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (14:22 IST)

சாவித்திரி தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்; வைரல் புகைப்படம்

நாக் அஸ்வின் இயக்கத்தில் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இதனை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில்   மகாநதி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
இப்படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
 
சாவித்திரி வாழ்க்கையை படமாக்குவதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதில் சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது  என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த கீர்த்தி சுரேஷ்,  சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து தெரிந்துகொண்டுதான் நடிக்கிறேன் என்றார்.
 
சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் சாவித்திரி தோற்றமும், ஜெமினிகணேசனாக நடிக்கும் துல்கர்சல்மான் தோற்றமும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.