புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:20 IST)

வர்வேற்பே இல்லாத கீர்த்தி சுரேஷ் குட்லக் சகி… இரண்டே வாரத்தில் ஓடிடியில்!

மகாநடி படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கு மற்றும் தமிழில் பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

அதனால் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகளவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதையடுத்து அப்படி அவர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸான படம்தான் குட்லக் சகி. ஒரு ஆண்டுக்கு முன்பே தயாரானாலும் கொரோனா காரணமாக ரிலிஸ் தள்ளி தள்ளி ஒருவழியாக கடந்த வாரம் வெளியானது.

ஆனால் இந்த படத்துக்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அமேசானின் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.