வித் அவுட் மேக்கப்பில் விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் , தெலுங்கு என உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அண்மையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மகாநடி படத்திற்காக பெற்று தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தார்.
தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால் நடிக்கும் "மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம்" என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து விளையாட்டு வீராங்கனையாக புதுப்படமொன்றில் நடிக்கவுள்ளார். நாகேஷ் கூகுனூர் இயக்கும் இப்படத்தில்
கீர்த்திக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார்.
இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடலை ஒல்லியாக மெருக்கேற்றி வரும் கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க வித் அவுட் மேக்கப்பில் நடிக்கவுள்ளாராம். தற்போது இப்படக்குழு கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.