வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 9 மே 2018 (17:33 IST)

இயக்குநருக்கு ஜோடியான ‘கயல்’ ஆனந்தி...

‘மூடர் கூடம்’ படத்தின் நவீனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ‘கயல்’ ஆனந்தி.

 
‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நவீன். டார்க் காமெடிப் படமான இதில், அவரே முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு தனராம் சரவணன் இயக்கத்தில் ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்தார். சமுத்திரக்கனி, சங்கவி இருவரும் ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் தயாராகி சில வருடங்கள் ஆனாலும், இன்னும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் நவீன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இன்னும் இரண்டு மாதங்களில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
 
இதற்கிடையில், ஒரு படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளாராம் நவீன். ‘கயல்’ ஆனந்தி, அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தைப் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடாமல், முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார். இந்தப் படத்தில், பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஆனந்தி.