வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (17:35 IST)

உங்க அடுக்குமொழியில் தீய வைக்க... டி.ஆர்-ருக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!!

விழித்திரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை தன்ஷிகா குறிப்பிட மறந்ததற்காக ஓவர் பில்டப் செய்தார் டி.ராஜேந்தர்.


 
 
டி.ராஜேந்தரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கவின்மலர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கவைன் மலர் கூறியதாவது, உங்க பெயரை எதற்கு தன்ஷிகா சொல்லணும் டி.ராஜேந்தர் அவர்களே? விழித்திரு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதைத் தவிர உங்கள் பங்கு ஒன்றுமில்லை. நான் படம் பார்த்துவிட்டேன். உங்கள் நினைவு அவருக்கு வராமல் போனது இயல்புதான். 
 
இதற்குக் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாத உடல் மொழியோடும், வாய் மொழியோடும் நீங்கள் பேசிய பேச்சு அருவருப்பின் உச்சம். தன்ஷிகா பணிவோடு சீனியர் என்கிற மரியாதையோடு பேசுகிறார். 
 
ஒருமுறை கிட்டத்தட்ட குனிந்து கால்களைத் தொட்டு மன்னிப்பு கேட்கிறார். ஆனால் திமிர் உங்களுக்கு அடங்கவில்லை. ‘சாரி கட்டிக்கொண்டு வராமல் ஸாரி கேட்கிறாய்’ என்று சொல்கிறீர்கள். உங்க அடுக்குமொழியில் தீய வைக்க… அவங்க என்ன உடையில் வந்தால் உங்களுக்கு என்ன?
 
கேட்டு வாங்குவதா மரியாதை? தன்ஷிகா கண்கலங்கும் அளவுக்கு தரந்தாழ்ந்து பேசுகிறீர்கள். இப்படி மேடைக்கு மேடை உளறி வருவதால் தான் உங்கள் மேலிருந்த மரியாதை மக்கள் மத்தியில் போனது. 
 
சக கலைஞரை மதிக்கத் தெரியாத, நாகரிகம் அற்ற உங்கள் பெயரை உச்சரிக்காத தன்ஷிகாவுக்கு வாழ்த்துகள். உங்களுக்குப் பின்னால் அந்தக் காணொளியில் சில முகங்கள் தெரிந்தன. அம்முகங்களின் சிரிப்பும் கைத்தட்டலும் உங்கள் பேச்சின் அருவருப்புக்கு சற்றும் சளைத்ததல்ல என கூறியுள்ளார்.