1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (17:43 IST)

தனுஷ் குரலில் "தட்டான் தட்டான் - கர்ணன் படத்தின் பாடல் ரிலீஸ்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் விளம்பரங்கள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்போது மூன்றாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் ரிலீஸ் ஆகியுள்ளது. 
 
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு பாடல்களான ‘கண்டா சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி புராணம் ஆகியவை மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் தற்போது தனுஷ் குரலில் தட்டான் தட்டான் பாடல் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யுகபாரதி இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். மீனாட்சி இளையராஜா எனும் பாடகர் சில வரிகளை பாடியுள்ளார். இதோ அந்த பாடல் வீடியோ...