1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (12:30 IST)

சென்னைக்கு ஷிப்டான கபாலி

செப்டம்பர் 18 மலேசியாவில் கபாலி படப்பிடிப்பை தொடங்குவதாகத்தான் திட்டம். இப்போது, மலேசியா வேண்டாம், சென்னையே போதும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.


 

 
ஆகஸ்ட் மாதமே கபாலி படப்பிடிப்பை தொடங்குவதாகத்தான் இருந்தார்கள் ரஜினியும், ரஞ்சித்தும். மலேசியா விசா அனைவருக்கும் கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால், ஒரு மாதம் தள்ளி, செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தனர்.
 
இந்நிலையில் திடீரென்று, சென்னையில் படத்தை தொடங்கி பத்துநாள் படப்பிடிப்பு நடத்திய பின் மலேசியா செல்லலாம் என முடிவெடுத்துள்ளனர்.
 
பூஜை போடுகிற அன்று ரசிகர்கள் அம்முவார்களே.