பல திருமணம் செய்துகொள்வேன்: ஆண்களே இந்த பெண்ணிடம் உஷாராக இருங்கள்!
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா பேட்டி ஒன்றில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்துகொள்வேன் என கூறியுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையான இவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியில், தான் திருமண உடையில் வருவதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
தன்னுடைய முதல் திருமண உடையை ஆடை வடிவமைப்பாளர் மானவ் கங்வானி தான் வடிவமைப்பார் என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நிருபர், என்ன முதல் திருமணமா? அப்படியென்றால் பலமுறை திருமணம் செய்துகொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கங்கனா, ஏன் பலமுறை திருமணம் செய்துகொள்ள கூடாது. ஒருமுறை திருமணம் செய்துகொள்ளும் போது பலமுறை திருமணம் நடக்கும் என நம்புகிறேன் என கூறி அதிர்ச்சியளித்தார்.
ஏற்கனவே நடிகை கங்கனா, நடிகர்கள், ஆதித்யா பஞ்சோலி, அத்யாயன் சுமன், ரித்திக்ரோஷன் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் இவரது இந்த ஓப்பன் பேட்டியால் இந்த பெயருடன் இன்னும் யார் யாரெல்லாம் சேர இருக்கிறார்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.