புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (15:56 IST)

நீங்கள் மனிதர் அல்ல… தெய்வம் – கங்கனா புகழ்ந்தது யாரை தெரியுமா?

நடிகை கங்கனா ரனாவத் தலைவி படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய்யை கடவுள் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் ரிலிஸ் தேதி ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கங்கனா இயக்குனர் விஜய் குறித்து டிவிட்டரில் ‘உங்களுடனான எனது பயணம் சீக்கிரம் முடியப் போகிறது. நீங்கள் எந்தவிதமான பார்ட்டிகளுக்கும் செல்வதில்லை. நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் ஜொலிக்கின்றன. எப்படிப்பட்ட இக்கட்டான நிலை வந்தாலும் உங்களிடம் கோபம், பாதுகாப்பின்மை, நம்பிக்கையின்மை ஆகியவற்றை நான் பார்த்ததில்லை. உங்கள் நீண்ட நாள் நண்பர்களிடம் பேசினால் அவர்களுடைய கண்கள் பிரகாசமாகின்றன. நீங்கள் மனிதர் அல்ல, கடவுள். என் ஆழ்மனதில் இருந்து உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.