நீட்டை நீட்டி முழக்காதீர் - டிவிட்டரில் கமல்ஹாசன் சீற்றம்
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நீட் தேர்விற்கு எதிராக அவர் வெகுநாட்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அரசுக்கு பல கோரிக்கைகளும் வைத்தார். ஆனால், நீட் தேர்வு கட்டாயம் என்கிற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தனது மருத்துவர் கானவு கலைந்த காரணத்தினால், அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும், நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்டில் “Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர். இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம். கூடி யோசிப்போம்! வெகுளாதீர்! மதி நீதியையும் வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளர்.