திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (15:14 IST)

கமல்ஹாசன் தப்பா நெனைக்கக் கூடாது… மருத்துவமனை திறப்பு விழாவில் ஜாலியாக பேசிய ரஜினிகாந்த்!

தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக காவேரி மருத்துவமனைகள் உள்ளன. அதன் புதிய கிளை ஒன்று சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று திறக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த் “இந்த உடம்பு பல மருத்துவமனைகளை பார்த்த உடம்பு. சென்னை விஜயா மருத்துவமனையில் இருந்து அமெரிக்கா மருத்துவமனை வரை பார்த்து விட்டேன். அதனால் மருத்துவர்களைப் பற்றி செவிலியர்களைப் பற்றியும் நன்றாக தெரியும். இந்த மருத்துவமனை இருக்கும் இடத்தில் பல சூப்பர் ஹிட் படங்களின் ஷூட்டிங் நடந்துள்ளது. அதனால் ராசியான இடத்தில்தான் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

முதலில் காவேரி மருத்துவமனையை ஆழ்வார்பேட்டையில்தான் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அதற்கு பக்கத்தில் இருந்த கட்டிடத்தையும் வாங்கிவிட்டாஎகள். முதலில் காவேரி மருத்துவமனை எங்கு இருக்கிறது என்று கேட்டால் கமல் வீட்டுக்கு பக்கத்தில் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது கமல் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால் காவேரி மருத்துவமனைக்கு பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். கமல் இதைக் கேட்டு தப்பா நெனச்சுக்கக் கூடாது. சும்மா சொல்றேன். மீடியா நண்பர்கள் கமல்ஹாசனை கலாட்டா பண்றேன்னு எழுதிடக் கூடாது.” எனக் கூறியுள்ளார்.