இந்தியும் தெரியாது, கன்னடமும் தெரியாது ஆனால் கலாச்சாரம் மட்டும் தெரியுமா?
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்தார். அவற்றில் தன்னை சிறையில் வைக்க வேண்டும் என்று கூறியவர்கள் குறித்து கமல் கூறியபோது:
பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே 11 வருடங்களாக இந்தியாவில் ஒளிபரப்பாகி வருகிறது. அப்போதெல்லாம் இவர்கள் கலாச்சாரம் குறித்து புகார் அளிக்க வில்லை ஏனெனில் இவர்களுக்கு இந்தி தெரியாது. கன்னடத்தில் கூட சமீபத்தில் ஒளிபரப்பானது. இவர்களுக்கு கன்னடமும் தெரியாது. ஆனால் கலாச்சாரம் மட்டும் இவர்களுக்கு புரிகின்றது. தேசத்தின் மொத்த கலாச்சாரமும் புரிகின்றது.
கன்றை இழந்த பசு மட்டுமே ஆராய்ச்சி மணியை அடிக்க வேண்டும். கண்ட மாடெல்லாம் அடிக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டதாக யாராவது கருதினால் அவர்கள் புகார் அளிக்கலாம்' என்று கமல்ஹாசன் கூறினார்.