திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (17:56 IST)

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் புதிய போஸ்டர்: இணையத்தில் வைரல்!

vikram
கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
 
‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூவரும் தோன்றும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 
 
அனிருத் இசையமைப்பில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது என்று குறிப்பிடத் தக்கது
 
vikram poster