வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (22:11 IST)

மணிரத்தினத்திற்கு பாடம் எடுக்கும் கமல்ஹாசன்?

kamal -thug life
தக்லைஃப் படத்தின் காட்சிகள் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் மற்றும் படக்குழுவினருடன் நீண்ட நேரம் கலந்துரையாடி வருவதால் தான்  தாமதமாவதாக தகவல் வெளியாகிறது.
 
ஏற்கனவே இவரும் இணைந்து நாயகன் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்ததால், இப்படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நீண்ட வருடங்கள் கழித்து தக்லைஃப் என்ற பிரமாண்ட படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
 
உலக நாயகன் கமலும் அனைத்து சினிமா விஷயங்களும் அறிந்தவர் என்பதால் அவர் படத்திற்கு எப்படி காட்சிகள், திரைக்கதை, இசை முதற்கொண்டு அனைத்திலும் கவனம் செலுத்துவார்.
 
எனவே இப்படத்திலும் மணிரத்னத்துடன் அவர் டிஸ்கசன் அல்லது விவாதம் செய்து காட்சிகள் ஒவ்வொன்றையும் மெருகூட்டி வருவதாக கூறப்படுகிறது.
 
தற்போது மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மக்களவை தேர்தலுக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் முடிந்த பின்  அவர் தக்லைஃபில் மீண்டும் பிஸியாகிவிடுவார் எனக் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே இப்படத்தில் துல்கர் சல்மான், விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சிம்பு நடிக்கவுள்ளதா தகவல் வெளியானது. ஆனால் சிம்பு வருகையால் ஜெயம்ரவி விலகினார். அதனால் அவருக்குப் பதிலாக அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.