புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:56 IST)

அரசியலுக்கு வந்தபின்பு கமல் சினிமாவில் நடிப்பாரா? இல்லையா?

‘அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமாவில் நடிக்க மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
 



 
அரசியலுக்குத் தான் வருவது குறித்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் கமல். ‘தமிழ்நாட்டின் முதல்வராகக் கூட தயார்’ என சில நாட்களுக்கு முன்பு கூட தெரிவித்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் விரைவில் கமலை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘பிக் பாஸ்’ மேடையில் அரசியல் பேசி ஆழம் பார்த்த கமல், மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்புகிறார். எனவே, விரைவில் தனிக்கட்சி அறிவிப்பு வரலாம்.

இந்நிலையில், ஒருவேளை கமல் அரசியலுக்கு வந்தபின்பு சினிமாவில் நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளித்துள்ள கமல், “அரசியலுக்கு வந்தபிறகு சினிமாவில் நடிப்பது என்பது மிகக் குறைவாகத்தான் இருக்கும். முழுநேரமாக அரசியலில் ஈடுபடவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரை கமல் நடித்த கேரக்டர்களில், அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு எந்த கேரக்டர் பொருத்தமாக இருக்கும்? என்ற கேள்விக்கு, ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் உதயசந்திரன் கேரக்டர் என்று தெரிவித்துள்ளார்.