வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (08:16 IST)

திகில் நிறைந்த "K13" பட டீசர் வெளியானது!

நடிகர் அருள்நிதி மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத் இணைந்து நடித்திருக்கும் கே 13 படம் டீசரை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார்.
 

"இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்திற்கு பிறகு  அருள்நிதி புதுமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில்   K13 என்ற புது படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதியுடன் சேர்ந்து நடிகை ஷ்ரதா ஶ்ரீநாத்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியானதை அடுத்து, தற்போது இதன் டீசரை இசையமைப்பாளர் அனிருத் தனது  ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். 
 
சைக்கோ திரில்லர் பணியில் உருவாகியுள்ள இப்படத்தில் , மன அழுத்தத்தினால் சைக்கோவாக நடந்துக் கொள்ளும் ஷ்ரதாவிடம் சிக்குகிறாரா அருள்நிதி? அப்படியென்றால் எப்படி தப்பித்துச் செல்வார்? என்ற விறுவிறுப்பான கதைக் களம் கொண்டு உருவாகியுள்ளது கே13.