செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (11:22 IST)

”இயக்குனர் சிகரம்” கே.பாலச்சந்தர் சிலை திறப்பு..

ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.

இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர். இந்நிகழ்ச்சியில் மணி ரத்னம், நாசர், கே.எஸ்.ரவிகுமார், வைரமுத்து, சந்தான பாரதி, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து விழாவில் பேசிய ரஜினிகாந்த், எனது கலையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கு நன்றி என கூறினார். மேலும் நான் ஹேராம் படத்தை 40 முறை பார்த்துள்ளேன், எனவும் கூறினார். அவரை தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ரஜினியும் நானும் ஒருவருக்கொருவர் ரசிகர்கள் தான் என கூறினார்.

இயக்குனர் கே.பாலசந்தர் தமிழ் சினிமாவின் முக்கிய “டிரெண்ட்” செட்டர்களில் ஒருவர். இவரின் திரைப்படங்கள் அனைத்திலும் வித்தியாமன கதைசொல்லல் நிறைந்திருக்கும். இயக்குனர் சிகரம் என போற்றப்படும் இவர், தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை நடிகர்களாக அறிமுகப்படுத்தியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 80 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய இவர், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார்.