வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:13 IST)

ஒல்லி நடிகரைப் பார்த்து பயந்த நடிகை

ஒல்லி நடிகரின் படம் ரிலீஸாவதால், அடுத்த வாரம் வெளியாக இருந்த நடிகையின் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.



 
ஒரு மிகப்பெரிய படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம், பல படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றிவிடுகிறது. அதற்கு, தல படமே உதாரணம். அவருடைய படம் வருகிற 10ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததால், ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு அடுத்த வாரம் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்ய முன்வந்தனர்.

காரணம், சுதந்திர தின விடுமுறை என்பதால், நான்கைந்து நாட்களுக்கு நல்ல கூட்டம் வரும். அப்படி போட்டி போட்டிக்கொண்டு அறிவித்த படங்களில், திருமணத்துக்குப் பின் சில வருடங்கள் கழித்து நடிக்கவந்த நடிகையின் படமும் ஒன்று. பெண்களைப் பற்றிய இந்தப் படம் தயாராகி சில மாதங்கள் ஆனாலும், சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது. எனவே, அடுத்த வாரம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், சிவபூஜையில் கரடி போல உள்ளே நுழைந்தார் ஒல்லி நடிகர். கடந்த மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டிய அவருடைய படத்தை, அடுத்த வாரம் ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்தார். இது ஏற்கெனவே ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் என்பதாலும், படத்துக்கு எதிர்பார்ப்பு இருப்பதாலும், மற்ற படங்கள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிட்டன. அதில், ஒளி நடிகையின் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.