செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (14:30 IST)

ஓடிடியில் ரிலீஸ் ஆன ஒரே நாளில் ட்ரண்டிங்கில் இடம்பிடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படம் 1975களில்  நடப்பதாக உருவாக்கப் பட்டு இருந்தது.

ரிலீஸ் ஆனது முதல் இந்த படத்துக்கு சிறப்பான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் படத்தின் வசூலும் சிறப்பாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆன நிலையில் ஜிகர்தண்டா  2 தீபாவளி வின்னராக அமைந்தது.

இப்போதும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் நேற்று நெட்பிளிக்ஸ் மற்றும் சன் டைரக்ட் ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் ரிலீஸ் ஆன ஒரே நாளில் நெட்பிளிக்ஸில் டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.