1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (14:49 IST)

மகனுடன் நடிக்கும் ஜெயம் ரவி

டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் அவரது மூத்த மகன் ஆரவ்வும் நடிக்கிறார்.

 
ஜெயம் ரவி தற்போது வனமகன், டிக் டிக் டிக் என இருபடங்களில் நடித்து வருகிறார். விஜய் இயக்கும் வனமகன்  இறுதிகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, சக்தி சௌந்தர்ராஜனின் டிக் டிக் டிக் படத்தில் கவனம் செலுத்துகிறார்.  விண்வெளியில் நடப்பதாக டிக் டிக் டிக் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
 
விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 15 ஆம்  தேதி தொடங்கிய நிலையில், 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஏவிஎம்  ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்டுகளும் போடப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் படமான டிக் டிக் டிக் -கை நேமிசந்த் ஜபக்   புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
 
இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடிக்கவிருப்பது முக்கியமானது.