வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (11:48 IST)

15 ஆண்டுகள் கழித்து அம்மாவை சந்தித்த ஜெயம் ரவி - வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான நல்ல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் ஜெயம் ரவியை நடிக்க வைத்து அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
 
அவர்களது திரைப்பயணம் "ஜெயம்" படத்தில் ஆரம்பித்து உனக்கும் எனக்கும், எம் குமரன் s/o மஹாலக்ஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் என பல்வேறு மெகா ஹிட் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதில் எம். குமரன் s/o மஹாலக்ஷ்மி படத்தில் ஜெயம் ரவிக்கு இளமையான அம்மாவாக நடிகை நதியா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், அசின், ஜனகராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். அம்மா மகனின் பாசம் நிறைந்த இப்படம் ஒட்டுமொத்த சினிமா பிரியர்களுக்கும் பிடித்துவிட்டது. 
 
இந்நிலையில் தற்போது அண்மையில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, நதியா இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டனர். மேலும், நதியாவின் கையால் விருதை வாங்கி மகிழ்ந்துள்ளார் ஜெயம்ரவி. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.