வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (18:32 IST)

அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பில் உருவாகும் ஜல்லிக்கட்டு படம்

அதர்வா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்த படத்தின் மூலம் அனுராக் காஷ்யப் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார்.
இந்தியில் முக்கிய இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் உருவாகும் ஒரு  படத்துக்கு இணை தயாரிப்பாளராக இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடைக்குக்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றது. உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து, போராட்டத்தின் பின்னணி, காரணங்கள், உலக அளவில்  நடந்த போராட்ட வடிவங்கள் ஆகியவையையும் சேர்த்து ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள். 
 
முக்கியமாக உலக தமிழர்கள் ஒன்றுபட்டு போராடியது எவ்வாறு என்பதனை இந்த படம் மூலம் தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின்  இயக்குனர் சந்தோஷ். உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் கென்யா நாட்டில் உள்ள மசாய்மாரா பகுதியிலும் படம் பிடிக்கப்பட்டுள்ள முதல்  தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.