திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (07:46 IST)

ஜெயிலர் படத்தில் தமன்னாவின் வேடம் இதுதானா?... ரம்யா கிருஷ்ணனின் ஃபெர்பாமென்ஸை மிஞ்சுவாரா?

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.  இந்நிலையில் ஷூட்டிங் மார்ச் மாதம் வரை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தமன்னாவின் கதாபாத்திரம் தனித்துவமான ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு கௌரவ வேடம் போல வரும் அவரின் பாத்திரம் படையப்பா படத்தின் ரம்யா கிருஷ்ணன் வேடம் போல அமையும் என சொல்லப்படுகிறது.