திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2017 (13:36 IST)

ஜெய் நடித்த முதல் திகில் படம் எதுனு தெரியுமா?

ஜெய் நடித்த முதல் திகில் படம், இன்று வெளியாகியுள்ள ‘பலூன்’ படம்தான்.
சினிஷ் இயக்கத்தில், ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது.
 
இந்தப் படம் குறித்து ஜெய், “பலூன் தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு   வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்' பட கதையை  இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது. ஒரு கதாபாத்திரத்தில் அசிஸ்டன்ட்  இயக்குனராகவும் , பிளாஷ்பேக் பகுதியில் பலூன் விற்கும் நபராகவும் நடித்துள்ளேன்.
 
இப்படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் என  நம்புகிறேன். இந்த படத்தை யுவனின் இசை அடுத்த தளத்திற்கு கொண்டுபோயுள்ளது என்பதே உண்மை. இது ஒரு திகில் படமாக  மட்டும் இல்லாமல், காதல், காமெடி என அனைத்து அம்சங்களும் அழகான கலவையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் எனது சினிமா வாழ்வில் ஒரு முக்கியமான படமாக  நிச்சயம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.