1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (12:18 IST)

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2ம் தேதி ஆஜராக இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனவே அவர் குறிப்பிட்ட நாளில் ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருக்கும் நிலையில் ஜாபர் சாதிக்கின் போதை பொருள் பிசினஸ் குறித்து அமீருக்கு ஏற்கனவே தெரியுமா? என்பது குறித்து இந்த விசாரணையில் தெரிய வரும்.
 
இந்த வழக்கு குறித்து எப்போது எந்த தகவல் வேண்டுமானாலும் தான் தெரிவிக்க தயாராக இருப்பதாக அமீர் ஒரு பேட்டியில் கூறி இருந்த நிலையில் இந்த சம்மனுக்கு அவர் நிச்சயம் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகும் அமீர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva