1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:40 IST)

பிரபல பாடகியோடு நெருக்கம் காட்டும் ஜெயம் ரவி?... இதுதான் விவாகரத்துக்கு காரணமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றிப் படம் கொடுக்கவில்லை. அதற்கு முக்க்கியக் காரணம் அவரின் சமீபத்தைய படங்களைத் தயாரித்தவரும், அவரின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார்தான் என சொல்லப்படுகிறது. மற்ற தயாரிப்பாளர்களை அவரை நெருங்கவிடாமல் சுஜாதா ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தனது அண்ணனோடு தனி ஒருவன் 2 படத்தையே அவரால் தொடங்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியினரின் இந்த பிரிவுக்கு ஆர்த்திதான் காரணம் என்றும், அவர் ஜெயம் ரவி மேல் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்து டார்ச்சர் செய்ததால்தால் இந்த முடிவை எடுத்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஜெயம் ரவி கோவாவைச் சேர்ந்த பாடகியான கென்னிஷா பிரான்சிஸ் என்பவரோடு இப்போது டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக அவர்கள் இருவரும் கோவாவில் ஒன்றாக இருந்ததாகவும், அவர்கள் இருவரும் ஓட்டிச்சென்ற கார் விதிமுறைகளை மீறி இருந்ததால் கோவா போலீஸ் அபராதம் விதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.