ஜெய்- அஞ்சலி ஒன்றாய் ஒரே வீட்டில் 'லிவிங் டுகெதர்' உறவிலா??
ஜெய் - அஞ்சலி இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது பேசப்படும். அந்த வகையில், சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் அந்த கிசுகிசுவை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது.
ஜெய் – அஞ்சலி இருவரும் ஜோடியாக வெளியிட்ட புகைப்படம் ஒன்று அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசரில் தோசை சுடும் காட்சியை வைத்து படத்திற்கு புரோமோஷன் செய்யப்பட்டது.
நடிகர் சூர்யாவும் தன் மனைவியான ஜோதிகாவுக்கு தோசை சுட்டுக் கொடுக்கும் படங்களும் வெளியாகின. அதே ஸ்டைலில் நடிகர் ஜெய்யும் நடிகை அஞ்சலிக்கு தோசை சுட்டுக்கொடுப்பது போன்ற படம் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
இதனால், இருவரும் ஒரே வீட்டில் 'லிவிங் டுகெதர்' வாழ்க்கை நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இருவரும் இப்போது ‘பலூன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். எனவே படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலிக்கு ஜெய் தோசை சுட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.