1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (20:41 IST)

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தை தயாரிப்பது இந்த நிறுவனங்களா?

rajamouli
எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த படத்தை தயாரிக்க டிஸ்னி நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் அதேபோல் குளோபல் ஸ்டுடியோஸ் நிறுவனமும் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இரண்டு சர்வதேச நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva