திரையரங்குகளில் தேசிய கீதம் வேண்டாம்; சித்தார்த்தின் புது ஐடியா இதோ
திரையரங்குகளில் இசைக்கப்படும் தேசிய கீதத்திற்குப் பதிலாக இதைச் செய்யலாம் என சித்தார்த் புது ஐடியா ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் நிர்பயா என்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் உயிர் இழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கும் மரண தண்டனை அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், ‘திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதற்குப் பதில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை என்று காட்டுவது அதிக தேசப்பற்றாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.