திருட்டு விசிடி பற்றி தகவல் தருபவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு: விஷால் அறிவிப்பு!
விளையாட்டு ஆரம்பம் என்ற படத்தை விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இணைந்து இயக்கி வருகின்றனர். அதில் யுவன், ஸ்ராவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது. விழாவில் ’விளையாட்டு ஆரம்பம்' படத்தின் இசை வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். தியேட்டரில் மறைவாக கேமராவை வைத்து, படத்தை படம்பிடிக்க முயன்றால், உடனடியாக துப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறு தகவல் தெரிவித்து, காவல்துறையிடம் எஃப்ஐஆர் பதிவு செய்ய உதவுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் மூலம் திருட்டு விசிடி தயாரிப்பு படிப்படியாக கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார்.