1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: செவ்வாய், 13 மார்ச் 2018 (16:44 IST)

கால வரையரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் - தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு

ஏற்கெனவே அறிவித்தபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். அத்துடன், வருகிற 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. மேலும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இயக்குநர் சேரன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 21 பேருக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சங்கத்தின் தலைவரான விஷாலும் கலந்து கொள்ளவில்லை. 
 
‘ஏற்கெனவே அறிவித்தபடி காலவரையற்ற போராட்டம் தொடரும். 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். மேலும், 23ஆம் தேதி முதல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும்’ ஆகிய முடிவுகள் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டுள்ளன.