தெலுங்கிலும் புலி பறக்குது
மோகன்லாலின் புலி முருகன் மலையாள சினிமா சரித்திரத்தில் 100 கோடியை வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்தப் படத்தை மான்யம் புலி என்ற பெயரில் தெலுங்கில் டிசம்பர் 2 -ஆம் தேதி வெளியிட்டனர்.
தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடித்திருப்பதாலும், ஜனதா கரேஜ் மூலம் மோகன்லால் ஆந்திர ரசிகர்களுக்கு இப்போதுதான் அறிமுகமானார் என்பதாலும், மான்யம் புலி தெலுங்கிலும் ஹிட்டாகியுள்ளது. படத்துக்கு நல்ல வசூல் என்று ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தமிழிலும் புலி முருகன் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.