செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2016 (18:32 IST)

டிசம்பரில் சமந்தா நாக சைதன்யா திருமணம்

டிசம்பரில் சமந்தா நாக சைதன்யா திருமணம்

வரும் டிசம்பர் மாதம் சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


 
 
சமந்தா - நாக சைதன்யா காதலிப்பது குறித்து நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுன் இதுவரை கருத்து எதுவும் கூறாமலிருந்தார். இப்போது முதல்முறையாக, ஆம் என்னுடைய மகன் ஒருவரை காதலிக்கிறான் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
 
சமந்தாவை மருமகளாக்கிக் கொள்ள நாகார்ஜுன் சம்மதித்திருப்பதை அவரது வார்த்தைகள் உறுதி செய்துள்ளன. 
 
சமந்தா நடித்து வரும் படங்கள் முடிந்த பின் டிசம்பரில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்