திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (12:15 IST)

பிக்பாஸ் வீட்டில் ஆரவ்காக ஓட்டு கேட்கும் ஓவியா!

பிக்பாஸ் 28ஆம் நாள் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றம் இல்லை என்பது போட்டியாளர்களுக்கு தெரியாத நிலையில், அவர்கள் நாமினேஷன் லிஸ்டில் ஓவியா, ஆரவ், ஜூலி, ரைசா ஆகியோர் உள்ளனர்.

 
போட்டியாளர் ஆரவ்விடம் பேசிக்கொண்டிருந்த ஓவியா "இந்த வீட்டில் இருக்கும் ஒரே ப்ரண்ட் நீதான். நான் தான் லூசு மாதிரி  உன்ன லவ் பன்னேன். ஆன உனக்குத்தான் லவ் இல்லையே. சரி ஓகே.. உன்ன வெளியே அனுப்ப விடமாட்டேன்" என கூறிவிட்டு, கேமராவை பார்த்து "மக்களே இவருக்கு ஓட்டு போடாதீங்க என்று கூறிவிட்டு, சாரி சாரி.. போடுங்க "என  சிரித்துக்கொண்டே சொன்னார்.
 
இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படப்போவதில்லை என ஏற்கனவே கமல் அறிவித்துவிக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.