சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் டி.இமான்
இசையமைப்பாளரான டி.இமான், சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
சினிமாவைப் பொறுத்தவரை, இந்த வேலையை இவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. திறமையும், வாய்ப்பும் இருப்பவர்கள் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம். நடிகர்கள் இயக்குநராகலாம், இயக்குநர்கள் நடிகராகலாம், நடிகர்கள் பாடகர்களாகலாம், பாடகர்கள் நடிகர்களாகலாம்… இப்படி ஒரு வேலை செய்பவர்கள், வேறொரு வேலையை எளிதாக செய்ய முடியும்.
அப்படி இசையமைப்பாளர்களாக இருந்து நடிகர்கள் ஆனவர்கள்தான் விஜய் ஆண்டனியும், ஜி.வி.பிரகாஷும். அனிருத்துக்கு கூட ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, டி.இமானும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை, சுசீந்திரன் இயக்கப் போகிறார் என்கிறார்கள்.