வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 7 மார்ச் 2020 (16:18 IST)

எனக்கும் என் ரசிகர்ளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை - அதிரடி அறிக்கை வெளியிட்ட அஜித்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித் திரைப்படங்களில் நடிப்பதுடன் சரி வேறு  எந்த விளம்பர படத்திலோ, நேர்காணலிலோ, விருது வழங்கும் விழாக்களிலோ பங்கேற்பதில்லை. இதனால் அஜித்தை நேரில் காண்பதென்பதே அரிதாக இருக்கிறது. இப்படியிருக்க நேற்று நடிகர் அஜித் சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதத்தில், அஜித் தரப்பிலிருந்தே அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், நடிகர்  அஜித்திற்கு எந்த சமூக ஊடக கணக்கும் இல்லை என்றும், எதிர்காலத்திலும் அவர் சமூக ஊகடங்களில் இணைய விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும்  சமூக வலைதளங்களில் வரக்கூடிய எந்தவொரு கருத்தையும் நடிகர் அஜீத் குமார்  ஆதரிக்கவில்லை எனவும் பேன்ஸ் பேஜ் உள்ளிட்ட எந்த குரூப்பையும் ஆதரிக்கவில்லை அழுத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

காலத்தின் தேவை கருதி சமூகவலைதளங்களில் நடிகர் அஜீத்குமார் இணையப்போவதாக ஒரு கடிதம் போலியான முறையில் தயார் செய்யப்பட்டு அஜித்குமார் வெளியிட்டதாக வந்த அந்த கடிதத்தில் அவரது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி வடிமைத்த அந்த நபரை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அஜித் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.