1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (13:15 IST)

நான் இந்த குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணே இல்லை: நடிகை காஜல் அகர்வால் பேச்சு!

தமிழ் சினிமாவில் நடிகை காஜல் அகர்வால் 2008ம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் நடிகர் பரத் உடன் பழனி என்ற  திரைப்படத்தில் அறிமுகமானார். 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

 
ஆரம்பகாலகட்டத்தில் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடித்து வந்த காஜல் அகர்வால்  பிறகு, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்தார்.
 
சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் பேசுகையில், நான் வட மாநில குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணே இல்லை. ஆனாலும் நான் மனதளவில் தென் இந்திய பெண்ணாக வாழ்வதையே நான் பெருமையாக நினைக்கிறேன். எனது ரசிகர்களும்  என்னை தென்னிந்திய நடிகை என்று அழைப்பதையே விரும்புகிறேன்.
 
காஜல் அகர்வாலின் பெற்றோர்கள் மும்பையை சேர்ந்த சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினர் ஆவார்கள்.